மீண்டும் ஹாட்ரிக் வீழ்த்திய அசத்திய தீபக் சாகர் – என்ன போட்டி தெரியுமா ?

Chahar-3
- Advertisement -

இந்திய அணி பங்களாதேஷ் அணியுடனான டி20 தொடரில் 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதற்கு அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது.

Chahar

இந்நிலையில் தற்போது சையது முஷ்டாக் அலி டி20 போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், விதர்பா அணியும் மோதின. இந்த போட்டியில் மழை காரணமாக ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

தன்படி முதலில் பந்து வீசிய ராஜஸ்தான் அணி சிறப்பாக பந்து வீசி 13 ஓவர்களில் 99 ரன்களில் சுருட்டியது. தீபக் சஹர் சிறப்பாக பந்து வீசி 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பங்களாதேஷ் அணிக்கெதிராக hat-trick வீழ்த்திய தீபக் சஹர் தற்போதும் ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தி உள்ளார். இருப்பினும் இந்த போட்டியில் விதர்பா அணியே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement