இன்னும் 1 விக்கெட் போதும் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை படைக்க காத்திருக்கும் – சாஹல்

Chahal
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே 27 ஆம் தேதி நடைபெற இருந்த இரண்டாவது போட்டி 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

bhuvi

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த போட்டி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 2வது டி20 போட்டியில் சாஹல் இந்திய அணிக்காக ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க காத்திருக்கிறார்.

ஏற்கனவே முதல் டி20 போட்டிகளின் போது சிறப்பாக பந்துவீசி அவர் 2வது டி20 போட்டியில் மேலும் ஒரு விக்கெட்டை விழ்த்தும் பட்சத்தில் இலங்கை அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக இதுவரை 7 போட்டியில் பங்கேற்றுள்ள அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் 2வது டி20 போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் அவர் 8 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைப்பார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான க்றிஸ் ஜோர்டான் இலங்கை அணிக்கு எதிராக 8 டி20 போட்டிகளில் பங்கேற்று 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Chahal

நாளைய போட்டியில் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் இந்த சாதனையை முறியடிப்பார் என்று தெரிகிறது. இவர்கள் இருவரை தொடர்ந்து 15 விக்கெட்டுகளுடன் பிராவோ, இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement