தோனியோட ரிட்டயர்மன்ட் விஷயத்தில் இந்த ஒரு விஷயம் அவரை ரொம்பவே பாதிச்சிடுச்சி – சாஹல் உருக்கம்

Chahal
- Advertisement -

தோனி ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஆடிய காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை வைத்து ஒரு பாடலை வைத்து ஒரு சிறிய வீடியோவாக அதனை மாற்றி எளிமையாக ஓய்வினை அறிவித்திருந்தார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஓய்வை அறிவித்துவிட்டார்.

Dhoni

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே தோனி எப்போது ஓய்வுபெறப் போகிறார் என்ற கேள்வி கிரிக்கெட் விமர்சகர்களிடம் இருந்து கொண்டே இருந்தது. ஏனெனில் அவருக்கு 39 வயதாகி விட்டது. ஆனால் கரோனா வைரஸ் தோனியின் உலகில் மிகப்பெரிய விளையாட்டு விளையாடி விட்டதாகவே பலரும் நினைக்கிறார்கள்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான செமி பைனல் போட்டிக்குப் பின்னர் இந்திய அணிக்காக ஆடாத தோனி டி20 உலக கோப்பை தொடரில் ஆட திட்டமிட்டிருந்தார் என்று தெரிகிறது. அப்போதுதான் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாட பயிற்சி எடுக்க தொடங்கினார்.

Dhoni

ஆனால் அந்த நேரத்தில் திடீரென கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி விட்டது. ஐபிஎல் தொடர் ஆறு மாத காலம் தள்ளிப் போடப்பட்டது. மேலும் இதன் காரணமாக டி20 உலக கோப்பை தொடரும் அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போடப்பட்டது. இதனால் உடனடியாக ஓய்வை அறிவித்து விட்டார் தோனி என்றும் பலர் கூறிவருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இதனையே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்…

chahal

கரோனா வைரஸ் தோனியின் ஓய்வில் மிகப்பெரிய விளையாட்டை விளையாடி விட்டது. தோனியின் ஓய்விற்கு இதுதான் மிகப்பெரிய காரணம். அவரது ஓய்வு எங்களை பாதித்துவிட்டது. அவராக இந்த முடிவினை எடுக்க வில்லை. இந்த வைரஸ் தான் அவரை இந்த முடிவை எடுக்க வைத்து விட்டது என்று கூறியுள்ளார்.

Advertisement