நானும் குல்தீப் யாதவும் இணைந்து விளையாடாததற்கு இவரே காரணம் – சாஹல் வெளிப்படை

Chahal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என்று மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி வந்த ரவிச்சந்திர அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு வீரர்களும், 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு சிறப்பாக பந்து வீச சிரமப்பட்டனர். இதற்கிடையில் இளம் ஸ்பின்னர்களாக இந்திய அணியில் அறிமுகமான யுஸ்வேந்திர சாஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் மிக அற்புதமாக பந்து வீசிய காரணத்தினால், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டனர். அதற்குப் பிறகு குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் கூட்டணி சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை பல போட்டிகளில் வெற்றி பெற வைத்தது. ஆனால் தற்போது இந்த இருவரின் இடமும் இந்திய அணியில் கேள்விக் குறியாக மாறி உள்ளது.

chahal

இதில் குறிப்பாக குல்தீப் யாதவின் கிரிக்கெட் கனவு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே கூறலாம். இந்நிலையில் சாஹலிடம், குல்தீப் யாதவுடன் ஒன்றாக இணைந்து இந்திய அணிக்காக பந்து வீசியதைப் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்திய அணிக்குள் ரவீந்திர ஜடேஜாவின் வருகை தான் எங்கள் இருவரையும் ஒன்றாக இணைந்து பந்து வீச முடியாமல் செய்தது என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஹர்திக் பாண்டியா என்ற ஆல்ரவுண்டர் இந்திய அணியில் விளையாடிய போதும், இரு ஸ்பின்னர்களாக நானும், குல்தீப் யாதவும் அணிக்குள் இடம்பிடித்திருந்தோம். ஆனால் 2018ஆம் ஆண்டு முதுகுவலி காயத்தின் காரணமாக, ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

அவருடைய ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்புவதற்கு இந்திய அணியில் மீண்டும் வந்த ரவீந்திர ஜடேஜாவும் ஒரு ஸ்பின்னர் என்பதால்தான், நானும் குல்தீப் யாதவும் ஒன்றாக இந்திய அணியில் விளையாட முடியாமல்போனது. துருதிர்ஷ்ட வசமாக ஜடேஜா ஒரு ஸ்பின்னராக இருந்துவிட்டார். ஒருவேளை அவர் வேகப் பந்து வீசக் கூடிய ஆல்ரவுண்டராக இருந்திருந்தால், நாங்கள் இருவருமே இந்திய அணியில் தொடர்ந்து ஒன்றாக விளையாடி இருப்போம். மேலும் இந்திய அணி 7வது இடத்திலும் ஒரு ஆல்ரவுண்டரை விளையாட வைக்க வேண்டும் என்று எண்ணியது. அந்த இடத்திற்கு ஜடேஜாவும் மிகக் கச்சிதமாக பொருந்திப்போனார் என்று அவர் கூறினார்.

Jadeja 2

2016ஆம் ஆண்டு சாஹலும், 2017 ஆம் ஆண்டு குல்தீப் யாதவும் இந்திய அணியில் அறிமுகமானார்கள். அதிலிருந்து இந்திய அணி விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் இந்த இருவரும் இல்லாத இந்திய அணியை பார்ப்பதே அரிதாக இருந்தது. அந்த அளவிற்கு இந்த இணை தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியது என்றே கூறலாம். கடைசியாக இந்த இருவரும் இணைந்து இந்திய அணிக்கு ஒன்றாக விளையாடிய போட்டி என்றால், அது கடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலந்துக்கு எதிராக லீக் சுற்றில் இந்தியா விளையாடிய போட்டிதான். அந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய இந்த இருவரும் அதற்குப் பிறகு இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடவே இல்லை. குல்தீப் யாதவுடன் இணைந்து பந்து வீசயதைப் பற்றி பேசிய சாஹால்,

- Advertisement -

நானும் குல்தீப் யாதவும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் விளையாடினால், இருவரும் இணைந்து குறைந்தபட்சம் மூன்று போட்டிகளிலாவது விளையாடி விடுவோம். அணியில் சமநிலைத் தன்மை என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடுவது, அந்த சமநிலைத் தன்மையை பாதிக்கிறது. எனவே அந்த சமநிலைத் தன்மையை தக்க வைக்க 7வது இடத்தில் ஒரு ஆல்ரவுண்டர் நிச்சயமாக தேவை. எது எப்படி இருந்தாலும் எனக்கு இந்திய அணி வெற்றி பெற்றால் போதும், அதுதான் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று சாஹால் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Chahal

யஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவின் வருகையினால்தான் ரவீந்திர ஜடேஜா என்ற ஆல்ரவுண்டரின் இடம், இந்திய அணியில் இருந்து பறிபோனது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே தன் அபார திறமையை வெளிக்காட்டி வந்த ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஒரு நாள் மற்றும் டி20 ஆகிய போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement