தோனி விக்கெட் கீப்பராக களத்தில் இருந்தால் போதும் எனக்கும் மட்டுமல்ல இவருக்கும் பாதி வேலை மிச்சம் – சாஹல் புகழாரம்

Dhoni chahal
- Advertisement -

தோனி கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவின் பெரும் சுமைகள் எல்லாம் இறக்கி வைக்கப்பட்டு சாதனைகளாக மாற்றப்பட்டது. ஒரே ஒரு வீரர், விக்கெட் கீப்பர் ஆகவும், ஒரு அதிரடி பேட்ஸ்மேன் ஆகவும் ஒரு சிறந்த கேப்டன் ஆகவும் வலம் வந்தார். 2007 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை அவர் ஒரு கேப்டனாக இருந்தார்.

Dhoni

- Advertisement -

2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் 2017 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்தும் தலைமைப் பொறுப்பை விராட் கோலியிடம் கொடுத்துவிட்டார். அவர் விராட் கோலியிடம் கேப்டன்சிப்பை கொடுத்தாலும் அவ்வப்போது அவருக்கு தேவையான வழிநடத்தல் களையும் சரியான முடிவுகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

குறிப்பாக பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போது எப்படி வீச வேண்டும் எங்கு வீச வேண்டும் என்பதையெல்லாம் அவரே செய்துவிடுவார். பந்துவீச்சாளர்களுக்கு பாதி வேலை குறைந்து விடும். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹ்ல் கூறுகையில் ..

chahal

இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர் தோனி. களத்தில் எனக்கும் குல்தீப்பிற்கும் பல சிறந்த முடிவுகளை எடுத்துக் கொடுத்துள்ளார். பல சமயங்களில் எங்களது பந்து வீச்சுகளை எதிரணி வீரர்கள் சிக்ஸர்களாக அடித்து நொறுக்கி கொண்டிருப்பார்கள். அப்போது பேட்ஸ்மேன்கள் எந்த இடத்தில் வீக் ஆனவர்கள் என்பதை அறிந்து அதற்கேட்டாற்போல் எங்களை பந்துவீச வைப்பார். அவர் சொல்லும் இடத்தில் வீசினால் விக்கெட்டுகள் தானாக விழும்.

ஒருமுறை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும்போது லதாம் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தோனி என்னிடம் வந்து என் தோள் மீது கை வைத்து, பந்தை கூக்லி பந்து வீச்சு என்று நானும் அவர் சொன்னபடியே செய்தேன். அவரது விக்கெட்டும் கிடைத்தது. தோனி சொல்வதை கேட்டால் உடனடியாக நமக்கு பலன் கிடைக்கும். இதுபோன்று பல முறை நடந்திருக்கிறது. அவர் இருந்தால் எங்களது 50 சதவீத வேலை முடிந்துவிடும் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார் சாஹல்.

Advertisement