INDIA : உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பந்துவீச்சு இதனை பொறுத்தே அமையும் – சாஹல்

இந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரு

chahal
- Advertisement -

இந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் உலக கோப்பையில் இந்திய அணியின் பவுலிங் குறித்து முக்கிய குறிப்பு ஒன்றை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இங்கிலாந்து மண்ணில் ஏற்கனவே நாங்கள் ஒருநாள் தொடரில் பங்கேற்று இருப்பதால் தற்போது இந்திய அணிக்கு அது மிகப்பெரிய பலம் அது மட்டுமின்றி அங்கு உள்ள சூழ்நிலைகள் எங்களுக்கு ஏற்றார்போல நாங்கள் எங்களை மாற்றிக் கொள்வோம்.

chahal

மேலும் இங்கிலாந்து மைதானங்களில் அதிகம் பவுன்ஸ் இருந்தாலும் பந்து ஸ்லோக இருக்கும் எனவே இந்திய அணி இந்த தொடரில் வேகத்தினை மாற்றம் செய்து மைதானங்களுக்கு ஏற்றார்போல பந்துவீசி எதிரணிகளுக்கு திணற ஏற்படுத்தி விக்கல் எடுக்கும் வகையில் பந்து வீச உள்ளது என்று கூறினார். இந்த உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சாஹல் தெரிவித்தார்.

Advertisement