ரோஹித் சர்மாவை பெண்ணாக மாற்றி புகைப்படத்தை பகிர்ந்த சாஹல் – வைரலாகும் பதிவு

Chahal-1
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் “பேஸ் ஆப்” என்ற செயலி மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த செயலியை வைத்து ஆண்களின் முகத்தைப் பெண்ணாகவோ, பெண்ணின் முகத்தை ஆணாக மாற்றிக் கொள்ளலாம். இது பெரும் நகைச் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதால் பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்று தோற்ற புகைப்படத்தை பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரான சாஹல் சக வீரர்களை கலாய்ப்பதில் வல்லவர். அதுவும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபராவார்.

இவர் தற்போது இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவின் புகைப்படத்தை “பேஸ் ஆப்” மூலம் பெண்ணாக மார்பிங் செய்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை ரோகித் சர்மாவிற்கு டேக் செய்து ரோகித் சர்மா “நீங்க ரொம்ப க்யூட்டா இருக்கீங்க” என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட ரோகித் சர்மாவும் பதிலுக்கு அவரை கலாய்க்கும் வகையில் ஒரு போட்டோவை பகிர்ந்து அந்த படத்தில் சாஹல் லூசாக இருந்த டி-ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தார் அதனைச் சுட்டிக்காட்டி “துணிக்குள் நீ இருக்கிறாயா அல்லது உனக்குள் துணி இருக்கிறதா” என்று கேலியாக பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chahal

இந்த இரண்டு பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த இரு பதிவினை கண்ட இந்திய ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement