அஷ்வினின் சாதனையை தட்டி தூக்கவுள்ள சாஹல் – விவரம் இதோ

Chahal

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

kohli 3

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் திருவனந்தபுரம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் சாஹல் டி20 போட்டியில் புதிய சாதனை ஒன்றைப் படைக்க இருக்கிறார்.

அந்த சாதனையை இதுவரை இந்திய அணி சார்பாக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் 46 போட்டிகளில் விளையாடி 52 விக்கட்டுகளுடன் முதல் உள்ளார். அதேபோல சாஹல் 35 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகள் உடன் முதலிடத்தை அவருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எனவே இந்த போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் அடுத்து பும்ரா 42 போட்டிகளில் 51 விக்கெட் வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -