வங்கதேச தொடரில் மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ள சாஹல் – சாதனை விவரம் இதோ

Chahal
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர்களாக இருந்த குல்தீப் மற்றும் சாஹல் அண்மைக்காலமாக அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். உலகக்கோப்பை தொடரில் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் ஏமாற்றம் அளித்தால் அந்த தொடருக்குப் பிறகு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.

Chahal

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு பேட்டிங் தெரிந்த ஸ்பின்னர்களான சுந்தர், ஜடேஜா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் சாஹலுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் சாஹல் விளையாடினால் அவர் ஒரு சிறப்பான சாதனையை படைக்க காத்திருக்கிறார். அது யாதெனில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கும் அவர் மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச டி20 போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார்.

chahal

இதற்கு முன்பு அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தொடரில் சாஹல் விளையாடுவது சந்தேகம் தான். ஏனெனில் பேட்டிங் தெரிந்த ஸ்பின்னர்களுக்கே இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement