இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆக இருந்தவர் தோனி. தற்போது இந்திய அணியில் அவர் இல்லை. கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் பின்னர் அணியை விட்டு வெளியேறினார். மேலும் அதன்பிறகு தற்காலிகமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து தனது ஓய்வு நேரத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்ப தோனி நினைத்தார்.
ஆனாலும் அதன்பிறகு இந்திய அணி தேர்வுக்குழு தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு அளிக்க மறுத்துவருகிறது. அதன்காரணமாக கடந்த பல தொடர்களாக இந்திய அணிக்காக அவர் விளையாடாமல் இருக்கிறார். இதனால் அவர் இந்திய அணிக்காக விளையாடி 10 மாதங்களுக்கு மேலாகி உள்ளது. இதன்காரணமாக இந்திய வீரர்களின் ஊதிய ஒப்பந்த பட்டியலிலும் இருந்தும் தோனியின் பெயர் நீக்கப்பட்டது.
அதன்பிறகு தற்போது வரை அவர் ஆடுகளத்திற்கு திரும்பவில்லை. மேலும் இந்திய அணிக்காக மீண்டும் அவர் ஆடுவாரா என்பதும் சந்தேகம்தான். இதனால் எப்படியாவது தோனியை மீண்டும் இந்திய ஜெர்ஸியில் கடைசியாக ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்களைப் போலவே இந்திய அணியில் உள்ள இந்திய வீரர்களும் அவரை மிஸ் செய்கின்றனர்.
ஆனால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றும் இனி தோனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் தோனி குறித்த எதிர்மறையான கருத்துக்கள் வந்துகொண்டிருந்தாலும் தோனிக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும், ஒருசில முன்னாள் வீரர்களும் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் இளம்வீரர்கள் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இதுகுறித்து கடந்த சில வாரங்களாக பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சாஹல் இது குறித்து பேசியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில், ‘நான் இவரை மிஸ் செய்கிறேன், இந்த ஜாம்பவான் என்னை ட்டில்லி (குரங்கு) என்று ஸ்டம்புக்கு பின்னாலிருந்து அழைப்பார். அதனை மிஸ் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Miss being called tilli from behind the stumps by the legend..!! 🤝🇮🇳 pic.twitter.com/iWGz6E11Pw
— Yuzvendra Chahal (@yuzi_chahal) May 3, 2020
இந்திய அணிக்கு மிகச்சிறந்த கேப்டனாக இருந்து உள்ள தோனி தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் 350 ஒருநாள் போட்டியில் 98 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும் ஒரு டி20 உலகக்கோப்பை, ஒரு 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்தையும் வென்றுள்ளார்.
சாஹலின் இந்த பதிவு தற்போது இணையத்தில் தோனி ரசிகர்களால் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சாஹல் யூடியூப் சேனலுக்கான வீடியோ பதிவு ஒன்றில் இந்திய அணியின் கடைசி இருக்கை தோனிக்கானது அவர் இல்லாமல் அந்த இடம் காலியாக உள்ளது. மேலும் அவரின் மீது உள்ள மரியாதையினாலும் அவரின் நியாபகத்தினாலும் அந்த இருக்கையில் யாரும் அமருவதில்லை என்றும் சாஹல் கூறியிருந்தார்.
அந்த வீடியோ அப்போது இணையத்தை கலக்கியது. அதனை தொடர்ந்து தற்போது சாஹல் வெளியிட்ட இந்த பதிவு ரசிகர்க மத்தியில் அதிகளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தோனி அணியில் இல்லையென்றாலும் அவர் குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.