மோசமான பந்துவீச்சின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்த சாஹல் – இவரா இப்படி

Chahal
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.

INDvsAUS Toss

- Advertisement -

அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

pandya 1

இந்த போட்டியில் பந்து வீசியதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சாஹல் மோசமான சாதனை பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளார். ஆம் இந்த போட்டியில் 10 ஓவர்கள் பந்து வீசிய சாகல் 89 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தி சற்று ஏமாற்றமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் படைத்த அந்த மோசமான சாதனை யாரெனில் :

- Advertisement -

இதுவரை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக ஒரே போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த சுழற்பந்து வீச்சாளராக கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 10 ஓவர்களில் 88 ரன்கள் விட்டு கொடுத்து இவரே முதலிடத்தில் இருந்தார். அந்த மோசமான சாதனையை மீண்டும் அவரே 89 ரன்கள் விட்டுக்கொடுத்து மறுபடியம் முதலிடத்திற்கு சென்றார்.

Chahal 1

இந்நிலையில் அவருடைய பழைய ரெக்கார்டை மீண்டும் தாண்டி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் மோசமான சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் முதன்மை பந்துவீச்சாளராக கடந்த பல ஆண்டுகளாகவே விளையாடி வரும் சாகல் இன்றைய போட்டியில் ஏமாற்றம் அளித்தாலும் வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என்பது உறுதி.

Advertisement