இந்திய அணியின் யார்க்கர் கிங் பும்ரா. யார்க்கர் குயின் நீங்களா ? – இளம் வீரரை கிண்டல் செய்த சாஹல் – விவரம் இதோ

chahal

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை முன்னிலை வகிக்கிறது.

Saini-1

இந்த 2-வது டி20 போட்டியில் பேட்ஸ்மேன்களைவிட பவுலர்கள் செயல்பாடு வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே கூறலாம். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்கள். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் தாகூர் 3 விக்கெட்டுகளும், சைனி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு வழக்கமாக தனது சாஹல் டிவிக்காக இந்திய வீரர்களை பேட்டி எடுப்பதை வழக்கமாக வைத்துள்ள சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இரண்டாவது போட்டி முடிந்த பிறகு சிறப்பாக செயல்பட்ட வீரர்களான தாகூர் மற்றும் சைனி ஆகியோரை தனது டிவிக்காக பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் சைனியிடம் சாஹல் பேசியபோது : ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் யார்க்கர் கிங் ஆனதால் நீங்கள் யார்க்கர் குயினா ? என்று கிண்டலாக கேட்டு நக்கல் அடித்தார்.

இதைக்கேட்ட சைனி மற்றும் தாகூர் ஆகியோர் அவரைப் பார்த்து சிரித்தனர். மேலும் தொடர்ந்து சில பல சுவாரசியமான விடயங்களையும் பரிமாறிக்கொண்டனர். இந்த பேட்டியை பிசிசிஐ வீடியோவாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது இந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் வைரல் ஆகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -