IND vs WI : எவ்வளவு பெரிய ஹிட்டர் இருந்தாலும் எங்களிடம் இந்த பிளான் உள்ளது – சாஹல்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை

Chahal
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.

india

- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்திய அணியின் வீரரான சாஹல் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி அனைத்து அணிகளை எதிர்த்தும் விளையாட தற்போது தயாராக உள்ளது. மேலும் எந்த அணியில் எவ்வளவு பெரிய ஹிட்டர்கள் இருந்தாலும் அதனை சமாளிக்கும். ஏனெனில் ஐபிஎல் போட்டிகள் என்பது வேறு உலக கோப்பை போட்டிகள் மற்றும் அதன் அதன் அழுத்தம் என்பது வேறு இங்குள்ள சூழ்நிலைகளை நமது அணி வீரர்கள் கச்சிதமாக புரிந்து வைத்துள்ளனர்.

chahal

மேலும் ரசல் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு என தனித்தனியே பந்துவீச்சு பிளான்களை நாங்கள் வைத்துள்ளோம். அதன்படி நாங்கள் செயல்பட்டு அவர்களின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவோம் எங்களிடம் வேறுபட்ட பவுலிங் பிளான் இருப்பதால் எங்களால் எந்த அணியும் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும் என்றும் மேலும் இந்த தொடரை கைப்பற்ற அதிகமாக வாய்ப்பு உள்ளது என்றும் சாஹல் கூறினார்

Advertisement