நேற்றைய போட்டியில் சைலண்டாக சாஹல் செய்த சாதனை. இதை பார்த்தீர்களா ? – சாதனை விவரம் இதோ

Chahal
- Advertisement -

நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் பந்து வீச்சாளரான தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணியை எளிதாக வெற்றி பெற வைத்தது என்று கூறலாம்.

Chahal

இந்தப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நேற்று அதிக ரன்களை விட்டு கொடுத்திருந்தாலும் இந்திய அணி சார்பாக ஒரு சாதனை ஒன்றை புரிந்துள்ளார். அதன்படி நேற்றைய போட்டியில் 4 வரிசை 43 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார் சாஹல். ஆனாலும் இதன் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில்

- Advertisement -

இந்திய அணி சார்பாக சர்வதேச டி20 போட்டிகளில் விரைவாக 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். நேற்றோடு சேர்த்து மொத்தம் 34 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள சாகல் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் டி20 போட்டிகளில் 50 விக்கெட்டை வீழ்த்தி இருந்தாலும் இவரை விட அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய டி20 வீரர் என்ற சாதனையை இலங்கையை சேர்ந்த அஜந்தா மெண்டீஸ் 26 போட்டிகளில் படைத்துள்ளார். அதற்கடுத்து ரஷித் கான் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் 31 போட்டிகளிலும், முஸ்டாபிசூர் 33 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement