கோலியையும், தமன்னாவையும் கைது பண்ணுங்க. இளைஞர் பலியான விவகாரத்தில் பரபரப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

- Advertisement -

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, இந்த வழக்கு மிகவும் வித்தியாசமானது. பொதுவாக இந்தியாவில் மக்கள் நேரடியாக சூதாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டம் இருக்கிறது. ஊருக்குள் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் பலரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றதை பார்த்திருப்போம்.

Kohli

- Advertisement -

ஆனால் சமீபகாலமாக ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இது பல கோடி ரூபாய் வியாபாரமாக மாறிவிட்டது. மேலும் இந்த சூதாட்டத்தை விளம்பரப்படுத்தி பல பிரபலங்கள் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். இப்படி சென்னையைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதன் காரணமாக உடனடியாக இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகிறது. இதனை வைத்து சூரியப் பிரகாசம் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tamannaah-1

பல இளைஞர்கள் இதற்கு அடிமையாகி இந்தியாவின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யக்கோரியும் மனு தாக்கல் செய்திருக்கிறார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் சூரிய பிரகாசம்.

ஆனால் இதுவரை இதுபோன்ற விசித்திரமான வழக்குகளில் சம்பத்தப்பட்ட பிரபலங்கள் யாரும் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement