IND vs ZIM : டி20 உலக கோப்பையில் விளையாடுவேனே தெரில – விதியால் பின்தங்கிய தீபக் சஹர் நெகிழ்ச்சியுடன் பேசியது இதோ

Deepak-Chahar
- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு எதிராக தலைநகர் ஹராரேயில் ஆகஸ்ட் 18-ம் தேதி துவங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிரட்டிய இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெறும் 189 ரன்களுக்குச் சுருண்டது. சிகந்தர் ராசா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சகப்வா 35 ரன்களை எடுத்தார். அதை தொடர்ந்து 190 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு எதிராக சுமாராக பந்துவீசிய ஜிம்பாப்வே பவுலர்களை கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய ஷிகர் தவான் 81* (113) ரன்களும் சுப்மன் கில் 82* (72) ரன்களும் குவித்து 192/0 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்தனர்.

KL Rahul IND Deepak Chahar

- Advertisement -

இதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஆகஸ்ட் 20இல் நடைபெறும் 2வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற தயாராகியுள்ளது. முன்னதாக முதல் போட்டியில் காயத்தால் 6 மாதங்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் 7, 9, 11 ஆகிய அடுத்தடுத்த ஓவர்களில் 3 முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட் செய்து ஆரம்பத்திலேயே இந்தியாவின் கையை ஓங்க வைத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

மீண்டும் முதலிலிருந்து:
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அபாரமாக செயல்பட்டதால் 2018இல் இந்தியாவுக்காக முதல் முறையாக அறிமுகமான இவர் பவர்பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்களை எடுக்கும் திறனைப் பெற்றிருப்பதால் பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார். ஆரம்ப காலங்களிலேயே சிறப்பாக பந்து வீசிய அவர் கடந்த 2019இல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்கள் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்து இந்திய டி20 அணியில் முதன்மை பந்துவீச்சாளராக உருவெடுத்தார்.

Deepak Chahar 1

அதனால் டி20 உலக கோப்பையில் பும்ராவுடன் பந்து வீசும் ஒருவராகக் கருதப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் சென்னைக்காக மீண்டும் 14 கோடிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததார். ஆனால் துரதிஸ்டவசமாக கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறி 6 மாதங்கள் கழித்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள அவர் தற்போது ஆட்டநாயகன் விருது வென்று டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வேலையை மீண்டும் முதலிலிருந்து துவங்கியுள்ளார்.

- Advertisement -

நேர்மையுடன் பேச்சு:
அடுத்ததாக நடைபெறும் ஆசிய கோப்பையில் ஸ்டேண்ட் பை லிஸ்ட்டில் மட்டுமே இருக்கும் அவருக்கு போட்டியாக அரஷ்தீப் சிங், ஆவேஷ் கான் போன்ற இளம் பவுலர்கள் இருப்பதால் டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றதற்காக டி20 உலக கோப்பையில் விளையாட தேர்வு செய்யப்படுவேனா என்பது தெரியவில்லை என தீபக் சஹர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது பற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “எங்கு விட்டேனோ அங்கிருந்து மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்று நினைக்கிறேன். இப்போட்டியில் முதல் 2 ஓவர்களை தவிர்த்து சிறப்பாக பந்து வீசினேன். அதிலும் 7 ஓவர்களையும் ஒரே மூச்சாக வீசியது நல்ல பிட்னஸ் உடன் இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது”

Deepak-Chahar

“டி20 உலகக்கோப்பையில் இடம் பிடிப்பது கடினமாகும். ஏனெனில் நான் இல்லாத சமயத்தில் சில வீரர்கள் நிலையான இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். எனவே உங்களது இடத்தை மீண்டும் பிடிக்க நீங்கள் மீண்டும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. அதனால் அழுத்தத்தை சந்தித்துள்ள நான் இந்த முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட முயற்சித்தேன். இப்போதைக்கு உலக கோப்பையில் நான் தேர்வு செய்யப்படுவேனா என்பது தெரியவில்லை, அது எனது கையிலும் இல்லை. இருப்பினும் நுணுக்கங்கள் அடிப்படையில் நான் கடினமாக உழைத்து வருகிறேன்”

“என்னுடைய திட்டங்களை எப்போதும் எளிதாக வைத்துள்ளேன். பந்து ஸ்விங் ஆகும்போது ஃபுல் லென்த் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுக்க முயற்சிக்கிறேன். ஒருவேளை ஸ்விங் ஆகவில்லை எனில் இதர திட்டங்களை கையிலெடுப்பேன். இந்த போட்டியில் 7வது ஓவர் வரை பந்து நன்றாக சுவிங் ஆனது” என்று கூறினார். தற்சமயத்தில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயத்தால் ஆசிய கோப்பையில் பங்கேற்கவில்லை. ஒருவேளை தொடர் காயத்தால் அவர்களில் யாராவது ஒருவர் டி20 உலக கோப்பையிலிருந்து விலகினால் அந்த இடத்தில் தீபக் சஹர் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisement