MI vs SRH : வாழ்வா – சாவா போட்டியில் ஹைதராபாத்தை வெளுத்த க்ரீன் – ரோஹித் சர்மா, மும்பை பிளே ஆஃப் சென்றதா?

Cameron Green
- Advertisement -

உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 21ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு மும்பையில் நடைபெற்ற 69வது லீக் போட்டியில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய ஹைதராபாத்தை பிளே ஆஃப் செல்ல நிச்சயம் தோற்கடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு அறிமுகமாக விளையாடிய இளம் வீரர் விவ்ரான்ட் சர்மா – மயங் அகர்வால் ஆகியோர் ஆரம்பம் முதலே மும்பை பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தனர்.

அதே வேகத்தில் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவித்து 14 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 140 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து அந்த ஜோடியில் விவ்ரான்ட் சர்மா 9 பவுண்டரி 2 சிக்சருடன் 69 (47) ரன்கள் குவித்து அவுட்டாக மறுபுறம் தனது பங்கிற்கு இந்த சீசனில் முதல் முறையாக அதிரடி காட்டிய மயங் அகர்வால் 8 பவுண்டரி 4 சிக்சருடன் 83 (46) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனால் 220 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹைதராபாத்தை கடைசி நேரத்தில் ஹென்றிச் க்ளாஸென் 18 (13) கிளன் பிலிப்ஸ் 1 (4) ஹரி ப்ரூக் 0 (1) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி 20 ஓவரில் 200/5 ரன்களுக்கு கட்டுப்படுத்திய மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அசத்தல் வெற்றி:
அதை தொடர்ந்து 201 என்ற கடினமான இலக்கை துரத்திய மும்பைக்கு இசான் கிசான் ஆரம்பத்திலேயே புவனேஸ்வர் குமார் வேகத்தில் 14 (12) ரன்களில் நடையை கட்டினார். ஆனால் இந்த வாழ்வா சாவா போட்டியில் மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மாவுடன் அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்து ஹைதராபாத் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தார்.

அதில் கருணை காட்டாமலேயே வெளுத்து வாங்கிய கேமரூன் கிரீன் முதல் ஆளாக அரை சதமடித்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்த நிலையில் மறுபுறம் இந்த முக்கிய போட்டியில் தனது அனுபவத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மாவும் 2வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 8 பவுண்டரி 1 சிக்சருடன் 56 (36) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அட்டகாசமாக பேட்டிங் செய்த கேமரூன் கிரீன் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ஹைதராபாத் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 8 பவுண்டரி 8 சிக்ஸருடன் தனது முதல் சதமடித்து 103* (47) ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார். அவருடன் சூரியகுமார் தனது பங்கிற்கு 4 பவுண்டரியுடன் 25* (16) ரன்கள் எடுத்ததால் 18 ஓவரிலெயே 201/2 ரன்கள் எடுத்த மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த சீசனில் ஆரம்பம் முதலே பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டும் கடப்பாரை பேட்டிங்கை வைத்து ஏற்கனவே 3 முறை தொடர்ந்து 200+ இலக்கை சேசிங் செய்த அணியாக வரலாற்று சாதனை படைத்த மும்பை இந்த வாழ்வா – சாவா போட்டியில் விடுவோமா என்ற வகையில் ஹைதராபாத்தை வெளுத்து வாங்கி தேவையான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

அதன் காரணமாக 6வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு மும்பை முன்னேறியதால் ராஜஸ்தான் அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. தற்போதைய நிலைமையில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை மும்பை உறுதி செய்தாலும் அடுத்ததாக நடைபெறும் 70வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை சொந்த ஊரில் பெங்களூரு எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் பெங்களூரு 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் கூட மும்பையை பின்னுக்கு தள்ளி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இதையும் படிங்க:IPL 2023 : எங்கள் நாட்டின் மைக்கேல் பெவன், மைக் ஹசி மாதிரி அவர் அட்டகாசமா ஆடுறாரு – இளம் இந்திய வீரரை பாராட்டிய டாம் மூடி

அதனால் மும்பை இதுவரை தகுதி பெறாமல் தான் இருக்கிறது. ஆனால் மதியத்திலிருந்து பெங்களூரு நகரில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அந்த போட்டி ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் மும்பை 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement