- Advertisement -
ஐ.பி.எல்

RR vs MI : பட்லர் இன்றைய போட்டியில் விளையாடாததன் காரணம் இதுதான் – அதிகாரபூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் தொடரின் 36 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஜெய்ப்பூரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவிற்கு பதிலாக புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார். இந்த போட்டியில் டாஸ் போட வந்தபோது ஸ்மித் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை செய்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த பிறகு அணியில் உள்ள மாற்றம் குறித்து பேசிய ஸ்மித் கூறியதாவது : இன்றைய போட்டியில் பட்லர் விளையாட வில்லை அவருக்கு பதிலாக ஸ்டோக்ஸ் விளையாடுகிறார். பட்லர் அவரது குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் அடுத்த போட்டியில் அணியில் இணைவார் என்று ஸ்மித் கூறினார்.

தற்போதுவரை மும்பை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை அடித்துள்ளது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான அணி சாதிக்குமா ? என்று பொறுத்திருந்து பார்த்தல் தெரியும்.

- Advertisement -
Published by