தோனி போட்டுள்ள விதை தான் இந்த 3 மூவரும். தோனியின் வழியை தான் இவங்க ஃபாலோ பண்றாங்க – பட்லர் பேட்டி

Buttler-3

இங்கிலாந்து அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மிகப்பெரிய ரசிகர் என்பது நாம் அறிந்ததே. எப்பொழுதும் தனது முன்மாதிரி தோனி தான் என்று கிரிக்கெட் களத்தில் கூறும் அவர் ஐபிஎல் தொடர்களில் தொடர்களின் போது தோனியை பார்த்தால் அவரிடமிருந்து விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் அறிவுரைகளை பெறுவது தோனியின் கையெழுத்திட்ட ஜெர்சியை பெறுவது என தான் ஒரு தோனியின் ரசிகராகவே நடந்துகொள்வார்.

Buttler-2

அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் பட்லருக்கு பிடித்த வீரர் என்றால் தோனிதான் என்பது உண்மையே இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் மூன்று இளைஞர்கள் தோனியின் வழியைத்தான் பின்தொடர்கிறார்கள் என அவர் ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

விக்கெட் கீப்பருக்கு தான் ஆட்டத்தின் மீதான பார்வை கூர்மையாக இருக்கும் என நான் கருதுகிறேன். மைதானத்தில் தன்மைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கவும், பந்துவீச்சாளர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ற வகையில் பீல்டர் களை நிற்கவைக்கும் முடிவுகள் என பலவற்றையும் கீப்பர் ஒருவரால் எடுக்க முடியும் என நான் நினைக்கிறேன் என பட்லர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

Rahul

அதனால்தான் தோனி ஒரு விக்கெட் கீப்பிங் கேப்டனாக இந்த அளவுக்கு ஜொலித்துள்ளார் என்றும் நான் நினைக்கிறன். தற்போது தோனியின் இந்த வழியை பின் தொடர்ந்து இளம் வீரர்களும் சிறப்பாக விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன் பணியை செய்ய தயாராகியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணியை சேர்ந்த கேஎல் ராகுல், டெல்லி அணியை சேர்ந்த பண்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பர் கேப்டன்கள் ஆக அணியை வழி நடத்த தயாராகி உள்ளனர்.

- Advertisement -

இவர்கள் மூவரும் தோனி போட்டுள்ள விதைதான் அவரை பின்தொடர்வதால் தான் இவர்களால் இளம்வயதில் கீப்பிங் செய்வது மட்டுமின்றி ஒரு அணிக்கு கேப்டன்ஷிப் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் உண்டாகி அவர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு வருகின்றனர் என பட்லர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.