கொரோனா ஊரடங்கில் இந்திய கிரிக்கெட் வீரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் – அதிர்ச்சி தகவல்

Saha-3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் விருத்திமான் சாஹா ஒருநாள் போட்டிகளுக்கும், டி20 போட்டிகளுக்கும் ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் விக்கெட் கீப்பிங் செய்து வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக செயல்பட்டு வருபவர் சஹா. இந்தியாவின் சிறப்பான விக்கெட் கீப்பர் மட்டுமின்றி உலக அளவில் தற்போது சிறந்த விக்கெட் கீப்பர் என்று விராட் கோலி இவரை சமீபத்தில் பாராட்டியிருந்தார்.

saha

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு பதிலாக இந்திய அணிக்கு தேர்வானவர் சகா. தோனி விட்ட இடத்தை சரியாக பயன்படுத்தி இந்திய அணிக்கு நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சகா இடையில் அவ்வப்போது ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் வந்து வந்து செல்கிறார்.

கடந்த சில தொடர்களாக காரணமாக இடம்பெறாமல் இருந்த சஹா மீண்டும் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் சகா ஐபிஎல் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள ஒரு திருட்டு சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

saha 2

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவே ஸ்தம்பித்து வரும் வேளையில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் சகாவின் சொந்தமான பரம்பரை வீடு இருக்கிறது. அந்த வீட்டில் நேற்று முன்தினம் இரவு திருட்டு கும்பல் ஒன்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

- Advertisement -

இது குறித்து பேசிய சகாவின் மாமா : ஒரு ஆறு பேர் கொண்ட திருட்டு கும்பல் கொள்ளை அடிக்க வீட்டுக்குள் புகுந்தது உடனடியாக சுதாரித்து காவல்துறைக்கு தெரிவித்தேன். இதனை அறிந்த கொள்ளையர்கள் காவல்துறை வருவதற்கு முன் அதனை அறிந்து வெளியேறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சஹா கூறுகையில் :

Saha

இந்த கொள்ளை சம்பவம் என்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. சிறுவயதில் நான் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் குறித்து கேள்வி பட்டுள்ளேன். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் துரிதமாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன் என்று சஹா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement