
சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் முதுகு பகுதியில் வலியை உணர்ந்த இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். சிறிது நேரம் கழித்து அவர் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன் காரணமாக பும்ராவிற்கு என்ன ஆனது? என்பது குறித்த கேள்வியும் அனைவரது மத்தியிலும் எழுந்தது. அந்த வகையில் ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு முதுகு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாகவே அவரால் இரண்டாவது நாள் ஆட்டத்தில் விளையாட முடியவில்லை.
அதன்பிறகு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்நிலையில் பும்ராவிற்கு முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது உறுதியானதன் காரணமாக அவர் இந்த போட்டியில் தொடர்ந்து விளையாடுவாரா? என்கிற எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த தொடர் முழுவதுமே அபாரமாக செயல்பட்டுள்ள பும்ரா இதுவரை 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இருக்கிறார். அதோடு இந்த சிட்னி போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் பும்ராவின் பங்களிப்பு நிச்சயம் ஒரு பெரிய விடயமாக இருக்கும்.
இந்நிலையில் மூன்றாவது நாள் போட்டியில் பும்ரா விளையாடுவாரா? அவரது காயத்தின் தன்மை என்ன? என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அந்த வகையில் போட்டியின் மூன்றாம் நாளான நாளை இரண்டாவது இன்னிங்ஸின் போது பும்ராவால் பேட்டிங் செய்ய முடியும். ஆனால் அவர் பவுலிங் செய்வதில் தான் பிரச்சனை இருக்கிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : நிச்சயமாக ஆஸ்திரேலிய அணியை எங்களால் வீழ்த்த முடியும்.. எங்களுக்கு இந்த பிளஸ் இருக்கு – பிரசித் கிருஷ்ணா
ஏனெனில் பேட்டிங்கின் போது பும்ரா சமாளித்து விளையாடலாம் என்றும் பந்துவீச்சில் மீண்டும் அவர் அழுத்தத்தை கொடுத்து விளையாடும் பட்சத்தில் அந்த தசைப்பிடிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அப்படி காயத்தின் தன்மை அதிகரித்தால் அவர் மீண்டும் கிரிக்கெட்டில் இருந்து பெரிய இடைவெளியை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.