19 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு பும்ரா சந்தித்த மோசமான நிலை – 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இதை கவனிச்சீங்களா ?

Bumrah

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 24ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் இந்த போட்டியில் விழுந்த 30 விக்கெட்களில் 28 விக்கெட்டுகள் ஸ்பின் பவுலர்களால் கைப்பற்றப்பட்டவை.

ind

மேலும் இந்த போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்ததால் இந்த மைதானம் குறித்து பெரிய சர்ச்சை வெடித்தது நாம் அறிந்ததே. இந்நிலையில் இந்த போட்டியில் நாம் அறியாத ஒரு விடயத்தை இந்த பதிவில் காண உள்ளோம். அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடருக்கு முன்பு வரை வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றது இந்த பும்ரா முதன்முறையாக இந்திய மண்ணில் இத்தொடரில் தான் அறிமுகமானார். முதல் 2 போட்டிகளிலும் அவர் சில விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் மூன்றாவது போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

Bumrah

வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்கப்பட்ட அந்த இரண்டு விக்கெட்டுகளில் ஒன்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவாலும், மற்றொன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சராலும் எடுக்கப்பட்டவை. இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விற்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.

- Advertisement -

Bumrah

இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 83 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விக்கெட் எடுக்காமல் ஜஸ்பிரித் பும்ரா சென்றது இதுவே முதல் முறை. மேலும் மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்சில் போது 6 ஓவர்கள் வீசிய அவர் 19 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் அவர் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.