இவரை ஒருமுறையாவது கதறவைத்து பின்னர் விக்கெட் வீழ்த்த வேண்டும். இதுவே என் வாழ்நாள் ஆசை – பும்ரா

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான பும்ரா தற்போது பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியில் இடம்பெற்ற இளம் வீரரான இவர் ஐபிஎல் தொடரின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியில் இடம் பிடித்தார்.

Bumrah-1

- Advertisement -

இந்திய அணியில் இடம் பிடித்த ஆரம்பித்த காலத்தில் இருந்தே இவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்தார். மிக விரைவிலேயே உலகின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவராக மாறினார். நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறினாலும் அந்தத் தொடர் முழுவதும் பும்ராவின் பந்துவீச்சு எதிரணியை திணற வைத்தது என்றே கூறவேண்டும்.

பல்வேறு முன்னாள் வீரர்களும் இப்போது இருக்கும் பந்துவீச்சாளர்கள் கூட பும்ராவின் பந்து வீச்சினை பாராட்டி பேசிய பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இணைய நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பும்ரா தன் வாழ்நாள் ஆசை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

dravid

இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் உலகின் அனைத்து அணிகளின் பந்துவீச்சாளர்களையும் சோதித்து சிறப்பாக பேட்டிங் செய்வார். அவரை வீழ்த்துவது என்பது பந்துவீச்சாளருக்கு சிம்மசொப்பனமாக இருக்கும். என்னுடைய வாழ்நாள் ஆசையும் அவரை விக்கெட் வீழ்த்துவதுதான். அதுவும் டிராவிட்டை எனது பந்துவீச்சின் மூலம் கதற வைத்து பின்னர் விக்கெட் வீழ்த்த வேண்டும் அதுவே என்னுடைய வாழ்நாள் ஆசை .ஆனால் தற்போது அது நிறைவேற வாய்ப்பில்லை என்பது எனக்கு தெரியும் என்று பேட்டியளித்தார். ஒருவேளை தற்போது பும்ரா டிராவிட்டுக்கு பந்து வீசும் நிலை ஏற்பட்டால் விக்கெட் வீழ்த்துவாரா ? அல்லது டிராவிட் பும்ராவை சோதிப்பாரா ? என்பதை நீங்களே கூறுங்கள் நண்பர்களே.

Advertisement