டெஸ்ட் போட்டிகளில் நான் ஆசைப்பட்டு விளையாட காரணம் இதுதான் – பும்ரா விளக்கம்

Bumrah
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

bumrah

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகிறேன். அதனைப் போன்றே டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசி வருகிறேன்.

எனக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விட டெஸ்ட் போட்டியில் பங்கேற்க விருப்பம் ஏனெனில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே நான் எனது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பது கிடையாது. ஒரு உண்மையான கிரிக்கெட் வீரர் டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

Bumrah-1

எனவே டெஸ்ட் போட்டியிலும் என்னுடைய தாக்கத்தை நான் நிச்சயம் ஏற்படுத்த வேண்டும் அதனை செய்யும் வழியிலே தற்போது நான் பயணிக்கிறேன். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் சாதிக்காமல் அதற்கு இணையாக டெஸ்ட் போட்டிகளிலும் சாதிக்க விரும்புகிறேன். அதனாலேயே டெஸ்ட் போட்டியில் நான் தொடர்ந்து விளையாட ஆசைப்படுகிறேன் என்று பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement