என்னுடைய ஹாட்ரிக் சாதனைக்கு இவர்தான் காரணம். அவருக்கு நான் இதனை அர்ப்பணிக்கிறேன் – பும்ரா பேட்டி

Bumrah-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.

bumrah

- Advertisement -

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விகாரி 111 ரன்களை எடுத்தார். இஷாந்த் ஷர்மா 57 ரன்களை எடுத்தார். அதன் பிறகு முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா சார்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த போட்டியில் உலக சாதனை ஒன்றை படைத்தார். அதாவது பிராவோ, புரூக்ஸ் மற்றும் சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்தியா சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுக்கும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.

Bumrah

முதலில் ஹாட்ரிக் நிகழ்த்தியது பற்றி எனக்கு தெரியவே இல்லை. ஏனென்றால் மூன்றாவது பந்து பேட்டில் பட்டது போல நான் நினைத்தேன். ஆகவே நான் சரியான நேரத்தில் விக்கெட்டுக்கு முறையிட வில்லை. எனினும் சரியான நேரத்தில் கோலி ரிவியூ கேட்டதால் விக்கெட் கிடைத்தது. எனவே இந்த ஹாட்ரிக் சாதனையை நான் இந்திய கேப்டனுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று பும்ரா கூறினார்.

Advertisement