கட்டிப்பிடிப்பது, கைதட்டுவது எல்லாம் பிரச்சனை இல்ல. ஆனா இந்த ஒரு விடயம் மட்டும் இடிக்குது – ஐ.சி.சி க்கு வேண்டுகோள் வைத்த பும்ரா

Bumrah
- Advertisement -

கொரோன வைரஸ் எச்சில் மூலம் பரவுவதன் காரணமாக ஐசிசி இனி விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் பந்தில் எச்சில் தடவ கூடாது என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த முடிவிற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தும், ஒரு சாரார் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த விதிமுறை முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக அமையவுள்ளது என்று பல்வேறு பந்துவீச்சாளர்களும் புலம்பி வருகின்றனர்.

ind

மேலும் ஐசிசி இந்த விதியுடன் சேர்த்தே உடல்நலம் சார்ந்த, வீரர்களை கருத்தில் கொண்டு பல முக்கிய விதிகளை அமல்படுத்தியுள்ளது ஐசிசி. இந்த விதியில் ஒன்றுதான் எச்சில் தடவ கூடாது என்ற விதி. பந்தில் எச்சில் தடவவில்லை என்றால் பந்து பெரிதாக ஸ்விங் ஆகாது இதனால் போட்டி பேட்ஸ்மேனுக்கு இன்னும் ஆதரவாக மாறிவிடும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த விதி குறித்து பேசிக் கொள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா…
களத்தில் சக வீரருடன் கட்டிப்பிடிப்பது, கைகளை தட்டி கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவது போன்றவையெல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது எனக்கு கவலை அளிக்கிறது.

bumrah 2

இப்போதெல்லாம் சிறிய மந்தமான ஆடுகளங்கள் தான் கிரிக்கெட்டில் இருக்கிறது. நியூசிலாந்து மைதானத்தின் பவுண்டரி அளவைப் பார்த்தால் வெறும் 50 மீட்டர் தான். இங்கு பந்து பேட்டில் பட்டாலே சிக்சர் சென்று விடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் பந்தை பல் பலபலப்பாக்க பார்க்கத் தவறினால் பந்துவீச்சாளர்கள் நிலைமை மிகவும் மோசமானதாக மாறிவிடும்.

Bumrah-1

இதன் காரணமாக எச்சிலுக்கு பதிலாக வேறு ஒரு மாற்று பொருளை ஐசிசி கொடுக்க வேண்டும் அதற்கான வழியை கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா. இதே கருத்தினை ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் கூறி ஐ.சி.சி.க்கு வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement