கபில் தேவின் சாதனையை முறியடிக்க பும்ராவிற்கு இன்னும் 1 விக்கெட் தேவை – விவரம் இதோ

kapil
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் விளையாடி 191 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Kohli

- Advertisement -

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்களையும், கேப்டன் விராட் கோலி 50 ரன்களும் விளாசினர். இங்கிலாந்து அணி சார்பாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ராபின்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை குவித்துள்ளது. டேவிட் மலான் 25 ரன்களுடனும், ஜோ ரூட் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பாக இந்த 2 விக்கெட்களையும் ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தினார்.

Bumrah

மேலும் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை படைக்க காத்திருக்கிறார் பும்ரா. அதன்படி இந்திய அணி சார்பாக விரைவாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் கபில்தேவ்விடம் இருந்து பறிக்க இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை.

நிச்சயம் இரண்டாம் நாளான இன்று அவர் அந்த சாதனையை நிகழ்த்துவார் என்று நம்பலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 24 ஆவது போட்டியை விளையாடிவரும் பும்ரா 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement