Bumrah : ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பும்ரா – காரணம் இதுதான்

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில்

bumrah
- Advertisement -

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி கடந்த இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் வென்று வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சி செய்யும்.

Kohli

- Advertisement -

அதே போன்று தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் தொடரை ஆரம்பிக்க இந்திய அணி முயற்சி செய்யும். சவுதாம்ப்டனில் நாளை நடைபெற உள்ள இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஊக்கமருந்து சோதனக்கு உட்படுத்தப்பட்டார். பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஊக்க மருந்து தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் அவரை பயிற்சியிலிருந்து பாதையில் அழைத்துச் சென்று அவருக்கு சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை ஆகியவற்றை செய்து அவர் ஊக்கமருந்து எடுத்து இருக்கிறாரா என்று பரிசோதனை செய்தனர். இதற்கு முக்கிய காரணம் என்று பார்க்கையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். மேலும் உலகின் நம்பர் ஒன் பவுலராக அசைக்கமுடியாமல் உள்ளார் என்பதால் அவர் பந்துவீச்சில் சந்தேகம் ஏற்பட்டு அவர் தற்போது பரிசோதனையில் செய்யப்பட்டுள்ளார்.

bumrah 1

ஆனால் அவர் தனது திறமையால் எவ்வளவு சிறப்பாக பந்துவீசினாரே தவிர ஊக்கமருந்து எடுத்திருக்க மாட்டார் என்று இந்தியா நிர்வாகம் கூறி உள்ளது. மேலும் அவர் ஊக்கமருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது உண்மை என்றும் அறிக்கை வெளியாகியுள்ளது இன்னும் இந்த விவகாரம் குறித்த முழு அறிக்கையை இந்திய அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement