- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG : இங்கிலாந்து அணிக்கெதிரான மோசமான தோல்வி குறித்து பேசிய – இந்திய கேப்டன் பும்ரா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 1-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியானது 284 ரன்கள் மட்டுமே அடித்ததன் காரணமாக முதல் இன்னிங்சில் நல்ல முன்னிலை பெற்ற இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்சில் பெரிய ரன் குவிப்பிற்கு சென்று ஒரு கடினமான இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸின் போது புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை தவிர இந்திய அணியில் மற்ற எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவில் ரன் குவிக்காததன் காரணமாக 245 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட் ஆகியது. இதனால் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியானது வழக்கம் போலவே இந்த போட்டியின் நான்காவது இன்னிங்சில் தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 378 ரன்கள் குறித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 142 ரன்களும், முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஜானி பேர்ஸ்டோ மீண்டும் இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சிலும் அசத்தலான சதத்துடன் 114 ரன்களை குவித்தார். இவர்கள் இருவரது ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி எளிதாக இந்திய அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரையும் இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டுடைய அழகு இதுதான். முதல் மூன்று நாட்கள் ஆட்டத்தில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் நான்காவது நாள் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக நாங்கள் இந்த போட்டியில் பின்னடைவை சந்தித்தோம்.

- Advertisement -

இங்கிலாந்து அணி நாங்கள் தவறு செய்த இடத்தில் இருந்து சரியாக எங்களை சமாளித்து வெற்றியை நோக்கி சென்று விட்டனர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனவே அவர்களால் இந்த தொடரையும் சமன் செய்ய முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் எங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் அழைத்து வந்தனர்.

இதையும் படிங்க : IND vs ENG : மாஸ் வெற்றி, இங்கிலாந்து 2 புதிய வரலாற்று சாதனை – அவமான தோல்வியால் இந்தியா 2 பரிதாப சாதனை

ஆனாலும் இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்தது வருத்தமாக உள்ளது. என்னுடைய இந்த பொறுப்பை உணர்ந்து நான் அதற்கு ஏற்றார் போல் நல்ல சவாலான ஆட்டத்தையே கொடுத்ததாக நினைக்கிறேன். இந்திய அணியை வழிநடத்தியதின் மூலம் எனக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்தது எனவும் பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by