மலிங்காவிடம் இருந்து நான் யார்க்கர் வீச கற்றுக்கொள்ளவில்லை. உண்மையை உடைத்த – பும்ரா

Bumrah
- Advertisement -

கிரிக்கெட் உலகின் யார்க்கர் மன்னன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இலங்கை அணியை சேர்ந்த வீரர் “லசித் மலிங்கா” அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்போது யார்க்கர் பந்துகளை வீசுவதில் கில்லாடியாக இருக்கிறார். லசித் மலிங்கா அணியில் மும்பை அணியில் பெரிய வீரராக இருக்கும்போது அறிமுகமானவர்தான் ஜஸ்பிரித் பும்ரா.

ஆனால் தற்போது அவரின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து உலகின் நம்பர் பலராக நிற்கிறார் மேலும் இவ்வளவு சிறப்பாக செயல்படவும், யார்க்கர் வீசுவதுக்கு காரணம் மலிங்கா தான் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கூறி வருவதை நாம் கண்டிருப்போம். இந்நிலையில் இது குறித்து ஜஸ்பிரித் பும்ரா ஒரு கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

நான் மலிங்காவிடமிருந்து யார்க்கர் பந்துகளை வீச கற்றுக்கொண்டேன் என்று ஏராளமான ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை அவர் எனக்கு ஏதும் கற்றுத் தரவில்லை. அவரிடமிருந்து நல்ல மனநிலையை எப்படி வைத்திருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். மேலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் போட்டியை எவ்வாறு கையாள வேண்டும். கோபப்படாமல் இருப்பது, எப்படி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சரியான நேரத்தில் திட்டம் தீட்டுவது எப்படி என்பதை கற்றுக் கொண்டேன்.

Bumrah

நான் வெளியில் சென்று கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும்போது டிவியில் வேகமாக பந்து வீசுவது கிளீன் போல்ட் செய்வது என்று பந்துவீச்சாளர்கள் செயல்பாடு மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன் மேலும் அதனை போன்ற பந்துவீசும் விரும்புவேன். இந்த சில காரணங்களும் எனது பயிற்சியும் எனது சிறப்பான பந்துவீச்சுக்கு காரணமாக உள்ளது என்று பும்ரா கூறினார்.

Advertisement