வீடியோ : இங்கிலாந்து ஓப்பனரை முதல் ஓவரிலேயே வெளியேற்றிய பும்ரா – திகைத்துப்போன பேட்ஸ்மேன்

Bumrah

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்லே ஆகியோர் களமிறங்கினர்.

Kohli

டாஸ் வென்று எவ்வித தயக்கமும் இன்றி பேட்டிங்கை தேர்வு செய்ததால் இங்கிலாந்து அணி துவக்கம் முதலே ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் ஓவரிலேயே ஜஸ்பிரித் பும்ரா 5வது பந்தில் துவக்க வீரரான ரோரி பர்ன்ஸ்ஸை எல்.பி. மூலம் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.

- Advertisement -

அதன் பின்னர் டோம்னிக் சிப்லே மற்றும் கிரவ்லி ஆகியோர் சற்று நிதானமான பார்ட்னர்ஷிப் அமைத்து இரண்டாவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர். தற்போது வரை இங்கிலாந்து அணி இரண்டாவது செக்ஷனில் 38 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்களுடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

முதல் ஓவரிலேயே விக்கெட்டை கைப்பற்றிய பும்ராவின் இந்த அசத்தலான பந்துவீச்சை இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் விடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement