வீடியோ : ஃபோர், சிக்ஸ், ஃபோர் சாம் கரனை பேட்டிங்கின் மூலம் மிரளவைத்த பும்ரா – வைரலாகும் வீடியோ

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் நகரில் ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பாக கேப்டன் ஜோ ரூட் 64 ரன்களை குவித்து இருந்தார். பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

bumrah 1

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி அனந்து 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ராகுல் 84 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 56 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியின்போது 232 ரன்களுக்கு 8 விக்கெட் விழுந்து விட்டதால் நிச்சயம் இந்திய அணி 250 ரன்களைக் கூட கடக்காது என்றே அனைவரும் நினைத்தனர்.

ஆனால் இறுதி நேரத்தில் ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் விளையாடிய விதம் இந்திய அணியை 270 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றது. அதிலும் குறிப்பாக பும்ரா 34 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் என 28 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக சாம் கரன் வீசிய 82வது ஓவரின் முதல் 3 பந்துகளையும் பவுண்டரிக்கு பறக்க விட்டு குஷிப்படுத்தினார்.

முதல் பந்தை மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்த அவர் அடுத்த பந்தை புள் ஷாட் மூலம் சிக்சர் அடித்தார். அதற்கு அடுத்த பந்தை ஸ்லிப் ஏரியாவில் பவுண்டரி அடித்து தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். அவரது இந்த பேட்டிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement