தன்னைப்போன்று பந்துவீசிய பாட்டியை பார்த்து பும்ரா என்ன செய்தார் தெரியுமா ?

Bumrah

இந்திய அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறினாலும் இந்திய அணியின் பும்ராவின் பந்துவீச்சு இந்த தொடர் முழுவதும் சிறப்பாக இருந்தது. அனைத்து அணிகளும் பும்ராவை பார்த்து பயப்படும் அளவிற்கு அவர் சிறப்பாக பந்துவீசினார்.

இந்நிலையில் தற்போதும் அவரைப் போன்று ஒரு வயதான பாட்டி ஒருவர் பந்து வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மெதுவாக ஓடி வரும் அந்த பாட்டி பும்ரா போன்று பந்துவீச முயற்சி செய்கிறார். இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த நாள் எனக்கு சிறப்பாக மாற்றிவிட்டீர்கள் நன்றி என்பது போன்று அந்த பாட்டியின் வீடியோவை பகிர்ந்து ரொம்ப தனது பதிலை தெரிவித்துள்ளார் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.