ஸ்டம்பை உடைத்து தன் வருகையை அறிவித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் – விவரம் இதோ

Stump

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

Cup

இந்த டெஸ்ட் தொடருக்கு அடுத்து தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இடம்பெறவில்லை. காயத்திலிருந்து விடுபட்ட பும்ரா தற்போது முழுஉடற்தகுதியோடு இருந்தும் அவர் அணியில் சேர்க்கப்படாததற்கு காரணம் யாதெனில் அடுத்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் மிகப்பெரியது என்பதால் அந்த தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது பயிற்சி எடுத்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது பயிற்சி எடுத்துவரும் பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள பும்ரா இன்றைய பயிற்சி நேரமும், ஸ்டம்பும் முடிவுக்கு வந்துள்ளது என்று உடைந்த ஸ்டம்பை பதிவிட்டு பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -