பந்துவீச்சில் இவரே எனது குரு. அவரின் அறிவுரைகள் தான் என் சக்சஸிற்கு காரணம் – பும்ரா ஓபன்டாக்

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முதன்மை பவுலராகவும் விளங்கிவரும் பும்ரா கடந்த பல ஆண்டுகளாக தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல போட்டிகளின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்துள்ளார். எப்பொழுது எதிரணியை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்றாலும், எப்போது விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டி கேப்டன்கள் நினைத்தாலும் பும்ராவை அழைப்பதை நான் பல போட்டிகளில் பார்த்துள்ளோம்.

Bumrah

- Advertisement -

அதன்படி தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்து கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் வெளியான சில சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பும்ரா பதிலளித்துள்ளார்.

அதில் தனது சிறப்பான பந்து வீச்சு குறித்து பேசிய பும்ரா கூறுகையில் : நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினாலும் சரி, இந்திய அணியில் விளையாடினாலும் சரி, எங்கு சென்று கிரிக்கெட் போட்டிகளை விளையாடும் போதும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஷேன் பாண்டுடன் பேச முயற்சி செய்வேன்.

Bond

ஏனெனில் எங்கள் இருவருக்கும் இடையே நல்ல குரு சிஷ்யன் உறவு இருக்கிறது. நான் அவரை 2015ஆம் ஆண்டு முதல் முறையாக பார்த்தேன். அதன்பின்னர் அவர் கொடுத்த பல ஆலோசனைகள் அறிவுரைகள் அனைத்தும் எனது பந்துவீச்சை மேம்படுத்த உதவியிருக்கிறது. சிறுவயதில் இருக்கும் போதே நான் அவரின் பந்துவீச்சை பார்த்து ரசித்து உள்ளேன். தற்போது அவரிடம் இருந்து பெரும் ஆலோசனைகள் எனக்கு மிகவும் உதவுகின்றன.

Bumrah-1

எங்கள் இருவருக்குள் வருடா வருடம் சிறப்பான ஒரு புரிதல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அவரிடமிருந்து நான் வருடம் தோறும் ஒவ்வொரு புது விஷயத்தை கற்றுக் கொண்டே வருகிறேன். மேலும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் எனது பந்துவீச்சு இன்று சிறப்பாக இருப்பதற்கு அவர் கொடுத்த ஆலோசனைகள், அறிவுரைகள் தான் காரணம் என்று அவரை பும்ரா புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement