ஐ.சி.சி போட்ட இந்த ரூல்ஸ்னால என் பவுலிங்கே போச்சி. என்னால் பந்தை ஸ்விங் பண்ண முடியல – புலம்பிய பும்ரா

Bumrah
- Advertisement -

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக தற்போது இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த ஐந்தாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து அதிரடியாக விளையாடி வருகிறது. தற்போது 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் (218), சிப்லி 87 மற்றும் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின், பும்ரா, இசாந்த் சர்மா, நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர்.

இதில் 2 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா சேப்பாக்கம் மைதானத்தில் பந்தை ஸ்விங் செய்யமுடியவில்லை என்று கூறியிருக்கிறார். கொரானா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் பந்தில் எச்சில் தடவ தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பந்தில் எச்சில் தடவுவதன்மூலம் கொரானா பரவுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை அறிவித்திருக்கின்றனர்.

Bumrah

பந்தில் எச்சில் தடவுவதன் மூலம் பந்து ஸ்விங்காவும். இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். தற்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் சிரமப்பட்டு வருகிறார். இது குறித்து பேசியிருக்கும் அவர் : “சேப்பாக்கம் ஆடுகளம் சமநிலையாக இருக்கிறது. தற்போது கொரானா வைரஸ் இருப்பதால் பந்தை பளபளக்க செய்வதற்கு தடை இருக்கிறது.

bumrah

இதன் மூலம் நான் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாமல் தவித்து வருகிறேன். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடினார். அவர் இந்திய சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்டார். இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவிலும் ரூட் அதிரடியாக விளையாடி வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.

Advertisement