பும்ரா இந்தாண்டு முடியும் வரை கிரிக்கெட் விளையாட மாட்டாராம் – தேர்வுக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

Bumrah
- Advertisement -

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் பின்னர் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.

Bumrah-1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அடுத்த வருட ஆரம்பத்தில் வரும் முக்கிய தொடர்களான ஆஸ்திரேலிய தொடர் ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை தொடர் என பல்வேறு விளையாட இருப்பதால் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பல சீனியர் வீரர்களோடு சேர்த்து பும்ராவுக்கும் ஓய்வு கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகிட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சில் முக்கிய துருப்பு சீட்டாக இருக்கும் பும்ரா இந்த இரு மாதங்கள் நன்றாக உடற்தகுதியினை மேம்படுத்தவும் மேலும் அவர் தற்போது முதுகில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வு எடுத்தும் வருவதால் மேலும் அவருக்கு ஓய்வு கொடுத்து அவர் உடல்நிலை முற்றிலும் தேர்ச்சி அடைந்தபிறகு அவரை அணியில் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Bumrah

அதன்படி அடுத்து வரும் தொடர்களில் அவரை இந்திய அணி உபயோகிக்க இந்த வருடம் முழுவதும் அவருக்கு ஓய்வு அளிக்க உள்ளது. அவரின் உடற்பகுதி இந்திய அணிக்கு பெரிதும் முக்கியமானதாகும் எனவே அவர் இந்தியாவை நிர்வாகத்தால் அதிகாரபூர்வமாக ஓய்வு கொடுக்க பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement