இரண்டாவது டெஸ்ட் : ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஓய்வளிக்க இதுவே காரணம் – வெளியான தகவல்

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 277 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அபாரமாக வீழ்த்தியது. அதுமட்டுமின்றி இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் துவங்கியது. இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி காரணமாக இந்த போட்டியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் டாஸ் போடப்பட்டு முடிவடைந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங் செய்ய போவதாக அறிவித்தார்.

பின்னர் இந்திய அணியில் இருக்கும் மாற்றங்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார். அதில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கோலி அறிவித்தார். கடந்த போட்டியில் ஆடிய வாஷிங்டன் சுந்தர், நதீம் மற்றும் பும்ரா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Kuldeep

இதில் வாஷிங்க்டன் சுந்தர்க்கு பதிலாக குல்தீப் யாதவும் , நதீமுக்கு பதிலாக அக்சர் படேலுக்கும், பும்ராவிற்கு பதிலாக சிராஜும் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த பல போட்டிகளாக அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த குல்தீப் யாதவ்க்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரை அவர் இந்தப் போட்டியில் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஏற்கனவே அக்சர் பட்டேல் பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணியில் அறிமுகமானாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

axar 1

இந்நிலையில் இந்திய அணியில் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டதன் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடர்ச்சியாக 3 வகையான போட்டிகளிலும் இடம்பிடித்து விளையாடிவரும் பும்ராவிற்கு ஓய்வளிக்கும் விதமாகவும், முக்கியமான 3 ஆவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் பும்ரா முக்கியம் என்பதாலும் இந்த போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 54 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்துள்ளது. ரோஹித் 132 ரன்களுடனும், ரஹானே 36 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

Advertisement