டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்துள்ள பும்ரா – இவருக்கா இப்படி ஒரு நிலைமை

Bumrah
- Advertisement -

நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவற்ற நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்ததன் மூலமாக 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

Dekock

- Advertisement -

இப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்துவீசிய ஜாஸ்பிரிட் பும்ரா தன் t20 கிரிக்கெட் வாழ்க்கையில் மிக மோசமான பௌலிங் ரெக்கார்டை பதிவு செய்தார். முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். அவர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர் மும்பை இந்தியன்ஸ் அணி பௌலர்கள் கைரன் பொல்லார்ட் ஓவரை தவிர்த்து, அந்த அணியின் மற்ற பௌலர்களை எல்லாம் வெளுத்து வாங்கி விட்டனர் சென்னை பேட்ஸ்மேன்கள்.

குறிப்பாக இதற்கு முன் உலகின் நம்பர் ஒன் t20 பௌலராக விளங்கிய ஜாஸ்பிரித் பும்ரா ஓவரில் 56 ரன்களை அடித்தார்கள். 4 ஓவர்கள் வீசிய ஜாஸ்பிரித் பும்ரா 56 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலமாக பும்ராவின் t20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த போட்டியாக இந்த போட்டி அமைந்திருக்கிறது.

bumrah 1

இதற்கு முன்னதாக 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது டெல்லி அணிக்கு எதிராக பந்து வீசிய பும்ரா 4 ஓவர்களில் 55 ரன்கள் வழங்கியதே, அவருடைய மிக மோசமான பௌலிங் ரெக்கார்டாக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு பும்ரா முதல் முறையாக ஒரு டி20 போட்டியில் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்திருக்கிறார்.

Bumrah

சர்வ்வதேச டி20 போட்டிகளில் இதுவரை ஒரு முறைக்கூட 50 ரன்களுக்கு மேல் பும்ரா விட்டுக்கொடுத்ததில்லை. சர்வதேச போட்டிகளில் அவரது மோசமான பௌலிங் ரெக்கார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதுவரை 99 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ராவின் எகானமி ரேட் 7.4காக இருக்கிறது. சர்வதேச போட்டிகளில் அவருடைய எகானமி ரேட் 6.67 ஆகும்.

Advertisement