இன்று நான் உலகின் நம்பர் 1 பவுலராக இருக்க தோனியின் இந்த செயல்களே காரணம் – தோனியை புகழ்ந்த பும்ரா

Bumrah
- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டனாக விளங்கியவர். மேலும் மூன்று வகையான icc தொடர்களையும் கேப்டனாக இருந்து இந்திய அணிக்காக பெற்று கொடுத்துள்ளார் . இன்று அவருடைய பிறந்தநாள் இதனால் தற்போது தோனி வாழ்த்துமழையில் நனைந்து வருகிறார்.

- Advertisement -

ரசிகர்கள் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் வீரரான பும்ரா ஐ.சி.சி. வீடியோ ஒன்றிற்கு தோனி குறித்து பேசியுள்ளார்.

அதில் பும்ரா கூறியதாவது : நான் இந்திய அணிக்காக 2016ஆம் ஆண்டு அறிமுகம் ஆனேன். நான் அறிமுகம் ஆனபோது தோனி கேப்டனாக இருந்தார். எனவே எனக்கு மிகவும் எளிமையாக இருந்தது ஏனெனில் எனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் நான் அவரிடம் கேட்கும் போது அவர் எனக்கு அதனை புரியவைத்து நிலையான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவுவார்.

bumrah 1

மேலும் எனது பந்துவீச்சில் நான் முன்னேற்றம் காணவும் தோனி மிகவும் உதவினார். இன்று நான் உலகின் நம்பர் 1 ஆக இருக்க அவரும் ஒரு காரணம் என்று நான் கூறுவேன். ஏனெனில் அவருடைய பொறுமையான குணமும் மற்றும் போட்டியை அணுகும் நேர்த்தியும் மற்றும் அவர் எனக்கு அளித்த ஆலோசனைகளும் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது. என்று தோனி குறித்து பும்ரா பேசியுள்ளார்.

Advertisement