மிடில் ஆர்டரில் யுவ்ராஜ் சிங் பெஸ்ட்டா ? தோனி பெஸ்ட்டா ? – பும்ரா தேர்வு செய்தது யாரை தெரியுமா ?

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் 26 வயது முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்குடன் இன்ஸ்டாகிராம் மூலம் நேரடியாக கலந்துரையாடினார். இந்தியாவில் தற்போது இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் அனைவரும் இந்த ஓய்வு நேரத்தை சமூக வலைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கழித்து வருகின்றனர்.

Bumrah-2

- Advertisement -

மேலும் அவர்களுக்கு இடையே கிரிக்கெட் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது யுவராஜ் சிங்குடன் கலந்துகொண்ட பும்ராவின் இந்த உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது யுவராஜ் பும்ராவிடம் தொடர்ந்து கிரிக்கெட் குறித்த பல கேள்விகளை அடுத்தடுத்து கேட்டுக்கொண்டே இருந்தார்.

அதற்கு பும்ராவும் ஒன்றன்பின் ஒன்றாக பதில் அளித்துக் கொண்டே வந்தார். அதன்படி யுவராஜ் சிங் இந்திய அணி கேப்டன் விராத் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரில் யாரை சிறந்த பேட்ஸ்மேனாக நினைக்கிறீர்கள் ? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் : இதை பாருங்கள் நான் வெறும் நான்கு ஆண்டுகள்தான் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறேன்.

sachin-kohli

அவர்களில் யார் சிறந்தவர் என்பதை கணிக்கும் அளவிற்கு போதுமான அனுபவம் எனக்கு கிடையாது. விராட் அல்லது டெண்டுல்கர், சச்சின் அல்லது கோலி இதுபோன்ற கேள்விக்கு பதில் அளிக்கக் கூடிய நிலையில் நான் இல்லை. ஏனெனில் அவர்கள் என்னை விட மிக மிக அதிக சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.

- Advertisement -

உடனே யுவராஜ் அதற்கு நான் உனது சுயசரிதையை இங்கு கேட்கவில்லை ஐந்து வினாடிக்குள் உனக்கு பிடித்தமான வீரர் யார் என்பதை கூறியாக வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த பும்ரா கூறுகையில் : உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை சச்சின் பெற்றுள்ளார். கோலியும் அவரது ரசிகர் தான் அதனால் நான் டெண்டுல்கரை தேர்வு செய்கிறேன் என்று சொன்னார்.

Sachin

மேலும் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஹர்பஜன் ஆகிய இருவரில் யார் சிறந்த ஸ்பின்னர் என்று கேள்வியும் அவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த பும்ரா கூறுகையில் : ஏன் இப்படி சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்கிறீர்கள். நான் அஷ்வினுடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். மேலும் சிறுவயதிலிருந்தே ஹர்பஜன் பந்துவீசியத்தை பார்த்துள்ளேன் ஆகையால் எனது தேர்வு ஹர்பஜன் என்று பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்ந்து கேள்வி கேட்ட யுவராஜ் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் என்னை பிடிக்குமா ? அல்லது தோனியை பிடிக்குமா ? என்ற கேள்வியையும் எழுப்பினார். இதற்கு பதிலளித்த பும்ரா ஏன் இப்படி “அம்மா அப்பா இருவரில் யாரை பிடிக்கும்” என்று கேட்பது போல் இந்த கேள்வி உள்ளது. இந்திய அணிக்காக நீங்களும் தோனியும் இணைந்து வெற்றியைத் தேடித்தந்த ஆட்டங்களை பார்த்து வளர்ந்தவன்.

Yuvraj

என்னிடம் ஏன் இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்கிறீர்கள். நீங்கள் இங்கே குறிப்பிட்ட அனைத்து வீரர்களும் எனக்குப் பிடித்தமானவர்கள் தான். உங்கள் இருவரில் ஒருவரை என்னால் தேர்வு செய்ய முடியாது இளம் வயதில் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்று பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement