வலைப்பயிற்சில் ஸ்டம்பை தகர்த்த பும்ரா. பி.சி.சி.ஐ வெளியிட்ட – வீடியோ இதோ

bumrah-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை ஜனவரி 5 அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

- Advertisement -

இந்நிலையில் நாளைய போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் கலந்துகொண்டார். கடந்த சில தொடர்களாகவே முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்த பும்ரா தற்போது மீண்டும் முழு உடற்தகுதி பெற்று இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

நேற்று தனது பயிற்சியை மேற்கொண்ட பும்ரா ஸ்டம்பை குறிவைத்து பந்துவீசிய வீடியோ காட்சி ஒன்று தற்போது பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் பும்ரா கிளீன் போல்ட் செய்கிறார். தற்போது காயத்திற்கு பிறகு தனது வேகம் குறையாமல் இருக்கவும் பயிற்சி எடுத்து வருகிறார். அவரது இந்த பயிற்சியை பார்க்கும்பொழுது நாளைய போட்டியில் அவரது பந்து வீச்சு பிரமாதமாக இருக்கும் என்று மட்டும் தெரிகிறது.

Advertisement