Bumrah : பும்ராவுடன் காதலா ? உண்மையை வெளிப்படையாக சொன்ன – தமிழ் நடிகை

கடந்த சில நாட்களாக தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான அனுபமா பரமேஸ்வரன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி படு வைரலாக பரவி

Bumrah
- Advertisement -

கடந்த சில நாட்களாக தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான அனுபமா பரமேஸ்வரன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி படு வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் பும்ரா குறித்து முதன் முறையாக பேசியுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

anupama

- Advertisement -

மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் நம்மை கவர்ந்தது நடிகை அனுபமா தான். இந்த நிலையில் அனுபமா பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி வைரலானது.

எப்போதுமே பேட்டிங்கில் சிறந்து விளங்கும் இந்திய அணிக்கு, நிரந்தரமான சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இருந்தது. பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி, பவுலிங்கில் பெரும் பின்னடைவாக இருந்தநிலையில் இந்திய அணிக்கு பந்துவீச்சில் வலுசேர்த்து இன்று நம்பர் 1 பவுலராக பும்ரா உள்ளார்.

anupama 2

பும்ராவுடன் அனுபமா இணைத்து பேசப்பட்டதிற்கு காரணமே இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் பும்ராவின் ஸ்டேட்டஸ் அனைத்திற்கும் அனுபமா டுவிட்டரில் லைக் செய்து வருகின்றார்.அதேபோல் பும்ராவும், அனுபமாவின் ஸ்டேட்டஸ் அனைத்திற்கும் லைக் லைக் செய்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார் என்று முடிச்சு போட துவங்கி விட்டனர்.

anupama 1

இந்த நிலையில் பும்ரா குறித்து முதல் முறையாக பேசியுள்ளார் அனுபமா. இதுகுறித்து பேசியுள்ள அவர், பும்ரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்கு தெரியும். இதுவரை நான் அவரை சந்தித்ததே இல்லை. நான் அவரை காதலிப்பதாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது.
சமூக வலைத்தளங்களில் பிரபலங்களை பின்தொடர்வது சாதாரண விடயம் அதுபோன்றே நான் லைக் செய்தேன். இந்த வதந்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அனுபமா தெரிவித்துள்ளார்.

Advertisement