வெளியான ஐ.சி.சி ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியல். பும்ராவுக்கு இப்படி ஒரு நிலைமையா ? – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத இந்திய அணி வாஷ் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்தது. இந்நிலையில் தற்போது இந்த தொடருக்கு பிறகு ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த தர வரிசை பட்டியலில் பந்துவீச்சாளருக்கான பட்டியலில் இந்திய அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தனது முதலிடத்தை இழந்துள்ளார். மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட எடுக்காததால் புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 719 புள்ளிகளுடன் அவர் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்ட் 727 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் வீரரான முஜிபுர் ரகுமான் மூன்றாவது இடத்திலும், தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா நான்காவது இடத்திலும் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 5வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் நம்பிக்கை நச்சத்திரமான பும்ரா காயத்திற்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பினாலும் அவரிடம் இருந்து சிறப்பான பந்துவீச்சு வெளிவரவில்லை. இந்த நியூசி தொடர் பும்ராவிற்கு சற்று சொதப்பலாக அமைந்தது என்று கூறினால் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்பதே உண்மை.

Advertisement