ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்த பும்ரா – எத்தனையாவது இடம் தெரியுமா ?

Bumrah
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா சிறப்பாக பந்துவீசி மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Bumrah-1

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஐசிசி டெஸ்ட் போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதல்முறையாக பத்து இடங்களுக்குள் டாப் 10-ல் நுழைந்துள்ளார்.

மொத்தம் 774 புள்ளிகளுடன் அவர் தற்போது ஏழாம் இடத்தில் உள்ளார். இதற்கு முன்னதாக அவர் 16ஆம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் டாப் 10-க்குள் இடம் பிடித்தது சிறப்பான விடயமாகும்.

தனது சிறப்பான பந்துவீச்சை பும்ரா தொடரும் பட்சத்தில் விரைவில் முதல் மூன்று இடங்களுக்குள் வரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பும்ரா தற்போது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement