வலைப்பயிற்சியில் பந்துவீசிய பும்ரா. புகைப்படத்தை வெளியிட்ட பி.சி.சி.ஐ – எப்போது அணியில் இணைகிறார் தெரியுமா ?

Bumrah

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்திய அணியின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் ஆக திகழ்கிறார். இவரது சிறப்பான பந்து வீச்சின் மூலம் பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். முக்கிய கட்டங்களிலும், போட்டியின் திருப்புமுனை ஏற்படுத்தும் நேரத்திலும் இவரது பந்துவீச்சு இந்திய அணிக்கு பல முறை கை கொடுத்துள்ளது.

bumrah

உலக அளவிலும் சிறப்பாக பந்து வீசி வரும் பும்ரா அண்மைக்காலமாக காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார். அவரது பந்து வீச்சினால் ஆக்ஷனால் முதுகெலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை எடுத்து பும்ரா லண்டனுக்கு சென்று அறுவை சிகிச்சை இன்றி திரும்பி இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவ குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் பயிற்சி செய்தனர். இந்த பயிற்சியில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான பும்ரா கலந்துகொண்டு பந்து வீசினார்.

மேலும் இந்த வலைப் பயிற்சியின் போதும் அவர் சிரமமின்றி பந்துவீசியதாக தெரிகிறது. இருப்பினும் காயத்தின் தன்மை காரணமாக ரிஸ்க்கான கேட்சிகள் போன்றவற்றைத் தவிர்த்து வெறும் பந்துவீச்சில் மட்டும் கவனம் செலுத்தினார். பும்ரா பயிற்சி செய்த சில புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

- Advertisement -

மேலும் முழுவதுமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு இன்னும் பும்ரா தயாராகவில்லை என்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் நிச்சயம் இந்திய அணியில் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.