பும்ரா எப்போது இந்திய அணியில் மீண்டும் இணைகிறார் என்று தெரியுமா – விவரம் இதோ

Bumrah

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

Bumrah

இந்த டெஸ்ட் தொடருக்கு அடுத்து தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்தத் தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் பும்ரா அணியில் இடம்பெறவில்லை மேலும் அவர் இந்திய அணியின் எந்த தொடருக்கு திரும்புவார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தற்போதைய மேற்கு இந்திய தீவுகள் காண தொடரில் அவர் உடல்நலம் தேறி இருந்தாலும் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கமாட்டார் என்று தெரியவந்துள்ளது.

Bumrah-1

ஏனெனில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் முடிந்ததும் நியூசிலாந்து தொடர் 40 நாட்களுக்கு மேல் கொண்ட மிகப்பெரிய தொடராக அமைய உள்ளதால் அந்த தொடருக்கு தயாராகும் வகையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -