தவறவிட்ட சாஹல். சாதித்துக் காட்டிய பும்ரா. டி20 அரங்கில் புதிய ரெக்கார்டு – விவரம் இதோ

Chahal
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. ராகுல் மற்றும் தவான் ஆகியோர் அதிகபட்சமாக அரைசதம் அடித்தனர்.

Cup

அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி சார்பாக சைனி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா டி20 அரங்கில் ஒரு புதிய சாதனை படைத்தார். இதுவரை டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பட்டியலில் அஸ்வின், சாஹல் மற்றும் பும்ரா ஆகியோர் முறையே 52 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்றைய போட்டியில் 2 ஓவர்கள் வீசி 5 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் பும்ரா.

Bumrah

இதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். தற்போது 45 வது போட்டியில் விளையாடிய பும்ரா 53 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் சாஹல் வெறும் 37 போட்டியிலேயே 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நேற்றைய போட்டியில் 3 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காததால் அவரால் இந்த சாதனையை சமன் செய்ய முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement