தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் மிகப்பெரிய இழப்பு இதுதான் – ரவி சாஸ்திரி பேட்டி

Ravi

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

bumrah

இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது தொடரான தென்ஆப்பிரிக்க தொடர் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது தொடராக இது இந்தியாவிற்கு அமைய உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

தற்போது இந்திய அணி சிறப்பான நிலையில் இருந்தாலும் ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அது யாதெனில் நம் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக வெளியேறியுள்ளது நமக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஏனெனில் அவர் தொடர்ந்து சிறப்பாக வீசி வருகிறார். அவரது இந்த விலகல் சற்று கடினமான விஷயம்தான்.

Bumrah

இருப்பினும் இஷாந்த் சர்மா, ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசிவதால் அவர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார்கள். மேலும் இந்திய மண்ணில் நாம் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதால் இந்த தொடரில் நாம் வெற்றி பெற அனைத்து வாய்ப்பும் உள்ளது என்று ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.