யார் சொன்னது இவரது பந்துவீச்சு மாறிடுச்சின்னு. ஸ்டம்பை பறக்கவிட்ட பும்ரா – வைரலாகும் வீடியோ

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு இறுதியிலிருந்து பல தொடர்களில் விளையாடாமல் இருந்தார். இந்நிலையில் மீண்டும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு திரும்பினார் காயத்திலிருந்து திரும்பியபின் அவரது பந்துவீச்சு இதுவரை முன்பை போல தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதற்கு அவருடைய உடல் தகுதியும் ஒரு காரணம் மேலும் அவருடைய பந்துவீச்சில் சிறிய மாற்றத்தையும் அவர் கொண்டு வந்திருந்ததால் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர். இந்நிலையில் பும்ராவின் இந்த மோசமான பந்துவீச்சும் தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரில் அவரது பந்துவீச்சு முன்பைப்போல இல்லை என்றாலும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி துவக்க வீரரை அவர் கிளீன் போல்ட் செய்தார். அவரின் இந்த பந்துவீச்சு அவரது திறமையை மீண்டும் காண்பித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement